தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை சீசனையொட்டி ஊட்டியில் படப்பிடிப்புக்கு தடை!

நீலகிரி: கோடை சீசன் தொடங்கியதையடுத்து ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி

By

Published : Apr 3, 2019, 2:00 PM IST

Updated : Apr 3, 2019, 4:21 PM IST

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். இந்த சீசனில் விடுமுறையை சிறப்பாக கொண்டாட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த இடங்களுக்கு வருவார்கள் என்பதால் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும்.

இந்த ஆண்டும் சுமார் பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கேற்றார்போல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதாலும், சுற்றுலாத் தலங்களில் கோடை விழாவிற்கான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாலும், உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை, வரும் ஜீன் மாதம் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

ஊட்டியில் படப்பிடிப்புக்கு தடை
Last Updated : Apr 3, 2019, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details