தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாயை வேட்டியாடிய சிறுத்தை - வெளியான சிசிடிவி காட்சிகள்

குன்னூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை பதைபதைக்க செய்துள்ளன.

kunnur  leopard hunted dog  cctv footage of leopard hunted dog released  சிறுத்தை நடமாட்டம்  சிசிடிவி காட்சிகள்  நாயை வேட்டியாடிய சிறுத்தை  குன்னூரில் நாயை வேட்டியாடிய சிறுத்தை
சிறுத்தை

By

Published : Oct 17, 2021, 2:16 PM IST

நீலகரி:குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் நல்லப்பன் தெரு பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளது. முன்னதாக இரண்டு முறை குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது.

நாயை வேட்டியாடிய சிறுத்தை

மேலும் நேற்று (அக்.16) இரவு மூன்றாவது முறையாக வீட்டிற்குள் புகுந்து நாயை வேட்டையாடி சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுத்தை நாயை வேட்டையாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செயதுள்ளன. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு மானியம் வழங்க வேண்டும் - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details