தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி தொகுதியில்  தேர்தல் பணிகள் தீவிரம் - cctv camera

நீலகிரி: தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், ஓட்டு இயந்திரங்களை வைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவங்கியுள்ளது.

CCTV CAMERA

By

Published : Mar 25, 2019, 11:41 PM IST

நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே நேரத்தில், தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அதிகாரிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 223 மையங்களில் 250 ஓட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, அதனை வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி அறைகள் தேர்வு செய்து அங்கு அளவிடும் பணிகள் துவங்கியது. தொடர்ந்து, கண்காணிப்பு சிசிடிவி கெமரா பொருத்தி, கண்காணிக்கவும் ஏற்பாடுகளும் முடுக்கப்பட்டன.

கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில், வட்டாட்சியர் தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்ராஜ், உட்படப் பலர் கலந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details