தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கில் போர் நினைவு நாள்: ரத்ததான முகாம்

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் கன்டோன்ட்மெண்ட் வளாகத்தில் கார்கில் போர் நினைவு நாளை  முன்னிட்டு  ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

கன்டோன்மென்ட் வாரியம்

By

Published : Jul 25, 2019, 9:49 AM IST

குன்னூர் வெலிங்டன் ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கிவரும் வெலிங்டன் கன்டோன்ட்மென்ட் வாரியம் (CANTONMENT BOARD) சார்பில் கார்கில் போர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள், வாரிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டடோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்ததான முகாம்

இதில் வெலிங்டன் வாரிய முதன்மை நிர்வாக அலுவலர் பூஜா பி பலிச்சா, வாரிய துணைத் தலைவர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜி மெண்டால் மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.

குன்னூர் வெலிங்டன் கன்டோன்ட்மென்ட் வாரியம்

கார்கில் போரில் வெற்றிபெற்று 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நாளை கொண்டாடும் வகையில் வாரியம் சார்பில் கார்கில் போரில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ வீரர்களை கவுரப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

குன்னூர் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியம்

உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக ராணுவ மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details