மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்பட சூட்டிங் களைகட்டியுள்ளது. தற்போது உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.04) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் உயரத்திற்குச் சென்று பறந்து, வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்தது. இதைப்பார்த்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.