நீலகிரி: நாமக்கல் அருகே செல்லப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்கள் முதுமலையைச் சுற்றிப் பார்க்க காரில் வந்தனர். உதகைக்கு வந்த அவர்கள் இன்று (மார்ச். 17) காலை, கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 22ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த புகழேந்தி, ராஜ்குமார், தென்னரசு உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக 7 பேரையும் மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.