நீலகிரி: கூடலூர் பகுதியில் இருந்து மதுராந்தகம் சென்று கொண்டிருந்த கார் உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த பூவனம் (35), சத்தியா (35), செந்தில் (48), சம்பத் (40), அருணகிரி (45) உட்பட ஐந்து சுற்றுலா பயணிகளை தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் 108 வாகன ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர்.
பின்னர் விபத்தில் காயமடைந்த 5 பேரை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பின்னர் காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.