தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2021, 1:37 AM IST

ETV Bharat / state

ரிவால்டோ யானைக்கு காலர் ஐடி பொருத்தம்

உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் 80 நாட்களுக்கு மேலாக  அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்டு யானை ரிவால்டோவிற்க்கு காலர் ஐடி பொருத்தப்பட்டுள்ளது.

caller-id-fited-to-rivaldo-elephant
ரிவால்டோ யானைக்கு காலர் ஐடி பொருத்தம்

நீலகிரி:உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதிக்கு உட்பட்ட மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய கிராமப் பகுதிகளில் ரிவால்டோ என்ற ஆண் காட்டுயானை கடந்த 8 ஆண்டுகளாக சுற்றி திரிந்து வந்தது.

45 வயது மதிக்கதக்க அந்த யானையின் முன் நின்று செல்பி எடுப்பது, தொட முயற்சிப்பது உள்ளிட்ட வேலைகளில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டனர். இதனிடையே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ரிவால்டோ யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், கடந்த மே மாதம் அந்த யானை வாழைத்தோட்டம் சோதனை சாவடி அருகே அமைக்கபட்ட கிரால் எனப்படும் மரக்கூண்டிற்குள் உணவு சாப்பிட சென்ற போது அடைக்கபட்டது. மயக்க ஊசி, கும்கி யானைகளைப் பயன்படுத்தாமல் முதல் முறையாக புதிய முயற்சியாக ரிவால்டோ யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

ரிவோல்டோ யானை

ஆய்வு செய்ய குழு

ரிவால்டோ யானையை மீண்டும் வன பகுதியில் விடுவதா அல்லது முதுமலைக்கு கொண்டு செல்வதா என்பதை முடிவு செய்ய கால்நடை மருத்துவர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள் உள்பட 8 கொண்ட குழுவை புலிகள் காப்பக நிர்வாகம் அமைத்தது.

காலர் ஐடி பொருத்தம்

அந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிவால்டோ யானையை ஆய்வு செய்து அறிகையை சமர்ப்பித்தது. இந்நிலையில், கிராலில் அடைத்து வைக்கபட்டுள்ள ரிவால்டோவை உடனடியாக கூண்டிலிருந்து வெளியில் அழைத்து வந்து முதுமலை அபயாரண்யம் பகுதிக்கு கொண்டு சென்று 10 ஏக்கர் பரப்பளவிலான வன பகுதியில் வைத்து கண்காணிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவல் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரிவால்டோ யானைக்கு காலர் ஐடி பெருத்தப்பட்டது. தொடர்ந்த அந்த யானை காண்காணிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க:காட்டு யானை 'ரிவால்டோ' முகாமிற்கு கொண்டுச் செல்லும் பணி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details