நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து பழநி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தினை பாபு என்பவர் இயக்கிவந்தார். பேருந்து அருவங்காடு அருகே வந்தபோது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சிலர் திடீரென பேருந்தின் குறுக்கே காரை நிறுத்திவிட்டு, தன் தலைவர் வருகையில் ஏன் வழி விடவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், வாக்குவாதம் முற்றி, அரசுப் பேருந்து ஓட்டுநரை காரில் வந்த கும்பல் தாக்கியுள்ளது. அவர்களைத் தடுக்க முயன்ற பயணிகள் சிலரையும் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
இதுகுறித்து, பேருந்து ஓட்டுநர் வெலிங்டன் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இணைந்து, அவர்களைக் கைது செய்யும் வரை பேருந்துகளை இயக்கப்போவதில்லை எனக் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தனியார் பேருந்து புறப்பட தாமதம் - பொதுமக்கள் வாக்குவாதம்!