நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் தேயிலை தொழிலாளர்கள் வசிக்கின்றனர். வழக்கம்போல தேயிலை பறிக்க தோட்டத்துக்கு தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையின் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை உயிரிழந்த நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.