நீலகிரி : ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பில் வசித்துவரும் கூலி தொழிலாளியான சுரஜ் பகதூர் என்பவரின் மனைவி சஞ்சனா(28) 2ஆவது பிரசவத்திற்காக ஜூலை 30ஆம் தேதி ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 4ஆம் தேதி சுகப் பிரசவத்துடன் பெண் குழந்தை பிறந்ததது. ஓரிரு நாள்களுக்குப் பின்னர், சஞ்சனாவிற்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டடுள்ளது. அதையடுத்து நேற்று (ஆக.07) மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப, சஞ்சனாவின் கையில் செலுத்தப்பட்டிருந்த ஊசியை மருத்துவமனை செவிலியர் ஒருவர் எடுக்க முயற்சித்தார்.
பெண்ணின் கையில் சிக்கிய ஊசி அப்போது, ஊசி உடைந்து அதன் சிறு துண்டு கையில் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்தும், சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதையடுத்து மருத்துவர்கள், சஞ்சனாவை பரிசோனை செய்து கோவை மருத்துவமனைக்கு செல்லுமாரு பரிந்துரை செய்துள்ளனர். அப்போது, மூன்று மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமளையை முற்றுகையிட்டுனர்.
அத்துடன் இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த காவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: எத்தனை பேருக்கு தொலைப்பேசி வாயிலாக மருத்துவ ஆலோசனை?