தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை காரணமாக குன்னூர் பூங்காவில் படகு போக்குவரத்து ரத்து - boating service stopped

நீலகிரி: கனமழை காரணமாக குன்னூர் பூங்காவில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழை காரணமாக குன்னூர் பூங்காவில் படகு போக்குவரத்து ரத்து

By

Published : Aug 11, 2019, 3:57 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில், கடந்த ஒருவாரக் காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவும், மரங்களும் விழுந்து கிடக்கின்றன. இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான பழமை வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக யானைக்கால் மரம், காகிதம் மரம், ருத்ராட்ச மரம், மேப்பிள் மரம், போன்ற பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரகன்றுகள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறது.

மழை காரணமாக குன்னூர் பூங்காவில் படகு போக்குவரத்து ரத்து.

இதனைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள், இங்கு ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாகத் தொடர்மழை பெய்து வருவதால் பூங்காவில் உள்ள யூகலிப்டஸ் மற்றும் மேப்பில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. அதுமட்டுமின்றி பூங்காவில் கடந்த நான்கு நாட்களாகப் படகுப் போக்குவரத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details