கோடைவிடுமுறை தொடங்கியுள்ள நிலையில், வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் உதகையில் கோடை சீசன் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர்.
உதகையில் பெய்த மழை காரணமாக படகு சவாரி ரத்து! - ஊட்டி
ஊட்டி: உதகையில் இன்று சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ந்து மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்படுவதாக படகு இல்லம் மேலாளர் தெரிவித்தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தாலும், நீண்ட நாட்கள் கழித்து பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதமான காலநிலையால் உதகை படகு இல்லத்தில் மிதி படகு, மோட்டர் படகு, துடுப்புப் படகு ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்வார்கள். கடந்த சில மாதங்களாக உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இம்மழையினால் படகு இல்லத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், இன்று படகு சவாரி ரத்து செய்யப்படுவதாக படகு இல்லம் மேலாளர் தெரிவித்தார். படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.