உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் படகு இல்லமும் ஒன்று. இங்கு ஆண்டிற்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய துடுப்பு படகு, மோட்டார் படகு, மிதிபடகு என 3 வித படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் மோட்டார் படகு, துடுப்பு படகுகள் அனுபவம் வாய்ந்த படகு ஓட்டுநர்களை கொண்டு இயக்கபடுகின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக படகு இல்லம் மூடப்பட்டது. இதனையடுத்து படகு ஓட்டுநர்களுக்கு வேலையில்லாமல் போனது. கடந்தாண்டு கரோனா ஊரடங்கின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம் 4,500 ரூபாய் மட்டுமே வழங்கியதாக படகு ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.