தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்! - Carrying the bronze in the residential area

நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

By

Published : May 8, 2020, 9:56 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாள்களாக அரிய வகையை சார்ந்த கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறது.

குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்

இந்நிலையில் கோத்தகிரி உயிலட்டி நீர் வீழ்ச்சி அருகே வலம் வந்த இந்த கருஞ்சிறுத்தைகள் அருகிலுள்ள நாய்களை பிடித்துச் செல்ல முயற்சித்தன. அப்போது தேயிலை தோட்டத்தில் வலம் வரும் சிறுத்தைகளைக் கண்ட பணியாளர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

பின்னர் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் கருஞ்சிறுத்தைகளை கண்காணித்து வருவதுடன் தேயிலை பணியாளர்கள் பணிக்கு செல்ல வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்குப் பிணை!

ABOUT THE AUTHOR

...view details