தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராணுவ வளாகத்தில் ஊடுருவும் சிறுத்தை! - Black Panther in army housing areas

நீலகிரி: குன்னூர் ராணுவ வளாகத்தில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Black Panther in army housing areas
Black Panther in army housing areas

By

Published : Mar 15, 2020, 12:06 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் வன விலங்குகளால் மக்களுக்கு அதிக உயிரிழப்பும் ஏற்படுகிறது. இச்சூழலில் வெலிங்டன் ராணுவப் பகுதியிலுள்ள ஜிம்கானா கிளப் சாலையில் இந்த வாரம் முழுவதும் கருஞ்சிறுத்தை இரவு நேரங்களில் உலா வருகிறது.

இந்தக் காட்சிகள் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்னூரில் இதுவரை தொடர்ந்து கண்காணிப்பு படக்கருவியின் பதிவில் ஆறுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உலா வருவது பதிவாகியுள்ளது. எனவே வனத்துறை சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவ வளாகத்தில் ஊடுருவும் சிறுத்தை

ABOUT THE AUTHOR

...view details