நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் குன்னூர் சுற்றுவட்டராப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கமாகியுள்ளது. குறிப்பாக கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்ககுள் இரவு நேரங்களில் உலா வருவது அதிமாகி வருகிறது.
குன்னூரில் கூலாக உலா வரும் சிறுத்தைகள் - மக்கள் பீதி
நீலகிரி: குன்னூர் டிரம்லா பகுதியில் கருஞ்சிறுத்தை, சாதாரண சிறுத்தை என இரண்டு சிறுத்தைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ,மே 27ஆம் தேதி இரவு கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் அளக்கரை அருகே டிரம்லா பகுதியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்றும், அதனைத் தொடர்ந்து சாதாரண சிறுத்தையும் வந்துள்ளன.
இது அங்கிருக்கும் வீட்டில் பொருத்தபட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது பரவி வருவதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். இச்சிறுத்தைகள்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டிரம்லா பகுதி அருகேயுள்ள எமகுண்டு கிராமத்தில் நான்கு ஆடுகளை வேட்டையாடி சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.