தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பா.ஜ.க-வின் வெற்றி கொண்டாட கூடிய வெற்றி இல்லை' - ஆ.ராசா - bjp victory

உதகை: பா.ஜ.க-வின் வெற்றி கொண்டாட கூடிய வெற்றி இல்லை என நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா

By

Published : May 23, 2019, 9:11 PM IST

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நீலகிரி தொகுதியில் 10 லட்சத்து 7ஆயிரத்து 774 வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று வாக்கு எண்ணிக்கையானது உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்றது. முதல் சுற்றுலிருந்தே அ.தி.முக வேட்பாளர் தியாகராஜனை காட்டிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் இருந்தார்.

தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா மொத்த வாக்காக ஐந்து லட்சத்து 47ஆயிரத்து 832 வாக்குகளும், அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் 3லட்சத்து 42ஆயிரத்து 9வாக்குகளும் பெற்றனர். இதில் அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனை காட்டிலும் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 23 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஆ.ராசா மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் சான்றிதழ் பெற்றார்.

பின்னர் செய்தியாள்களிடம் பேசிய ஆ.ராசா," தமிழ்நாட்டில் தி.மு.க வெற்றியானது, ஸ்டாலின் அவர்களின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. பா.ஜ.க-வின் வெற்றி கொண்டாட கூடிய வெற்றி இல்லை. இதனால் நாட்டிற்கு பேராபத்து வந்துள்ளது. பா.ஜ.க-வின் வெற்றி பன்முக தன்மையை சிதைக்கும் வெற்றியாகும், இந்திய மக்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். வடநாட்டில் அண்ணா, காமராஜர் மற்றும் கலைஞர் போன்றோர்கள் இல்லை அதனால் தான் அங்குள்ள மக்கள் மதவாதத்திற்கு துணை போகின்றனர். நான் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சியடைவதாகும், மக்களுக்கு பலதிட்டங்கள் நிறைவேற்றபடும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details