நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் உதகை ஏடிசி பகுதியில் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றார். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜகவினர் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
உதகையில் வேல் யாத்திரை - நயினார் நாகேந்திரன் உள்பட பாஜகவினர் கைது
நீலகிரி: காவல்துறையின் அனுமதியை மீறி உதகை ஏடிசி பகுதியில் வேல் யாத்திரை மேற்கொண்ட, மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜகவினர் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. வேல் யாத்திரை மக்கள் மனதில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா தற்போது இல்லை. இந்த காலக் கட்டத்தில் பொதுமக்கள் பலரின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வேல் யாத்திரை நடைபெறும் இடங்களில் மிகப்பெரும் எழுச்சி உள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி தொடரும். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை தரும்" என்றார்.