நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றுவருகின்றன. அதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. ஊட்டி கேசினோ சாலையில் தொடங்கிய இப்பேரணி, ஏடிசி திடலில் முடிவடைந்தது. அதன்பின் அங்கு பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
'மதவெறியை திமுக தூண்டிவிடுகிறது' - சி.பி.ராதாகிருஷ்ணன் - சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணி
நீலகிரி: தமிழ்நாட்டில் இஸ்லாமிய மதவெறியை திமுக தூண்டிவிட்டு, அமைதியை நிலைகுலைத்து வருகிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
!['மதவெறியை திமுக தூண்டிவிடுகிறது' - சி.பி.ராதாகிருஷ்ணன் caa-in-nilgiris](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6435289--thumbnail-3x2-l.jpg)
இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் இஸ்லாமிய மதவெறியை திமுக தூண்டிவிட்டு, அமைதியை நிலைகுலைத்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது எந்த மதத்திற்கும் எதிரானதல்ல. அதனால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. பாகிஸ்தானில் இம்ரான்கான் பேச தயங்குவதெல்லாம் இந்தியாவில் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது வேதனைக்குரியது", என்றார்.
இதையும் படிங்க:பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலம் முன்பு இஸ்லாமியர்கள் போராட்டம்