உதகை சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பாஜக தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி ஹெலிகாப்டர் மூலம் இன்று (மார்ச் 22) உதகைக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரைக்காக வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி தாராபுரம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பரப்புரை செய்யவுள்ளார்.