தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக தேர்தல் பணிக்காக 4 கர்நாடக அமைச்சர்கள் நியமனம்!

நீலகிரி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில், தேர்தல் பணி செய்வதற்காக, கர்நாடக மாநிலத்தை சார்ந்த 4 அமைச்சர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

உதகை பாஜக தேர்தல் பணி
பாஜக தேர்தல் பணிக்காக 4 கர்நாடக அமைச்சர்கள் நியமனம்

By

Published : Mar 20, 2021, 12:37 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி சார்பாக, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனையடுத்து பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்வதற்காக, டெல்லியுள்ள பாஜக தலைமை, கர்நாடக மாநில அமைச்சர்களை களமிறக்கி உள்ளன.

பாஜக தேர்தல் பணிக்காக 4 கர்நாடக அமைச்சர்கள் நியமனம்

முதற்கட்டமாக 4 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ள நிலையில், உதகை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக கூட்டுறவு துறை அமைச்சர் சோம சேகர், பாஜக வேட்பாளர் போஜராஜனுடன், உதகை மறைமாவட்ட பங்குத்தந்தை அமல்ராஜினை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சோமசேகர், “கர்நாடகாவில் தேர்தல் இல்லாததால், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணி செய்ய வந்துள்ளதாகவும், தேர்தல் முடியும் வரை தமிழ்நாட்டில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது 4 அமைச்சர்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டு தேர்தல் பணி மேற்கொண்டு வருவதாகவும், தேவைப்பட்டால் மேலும் சில அமைச்சர்கள் வருவார்கள்” என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கர்நாடக அமைச்சர்கள் களம் இறக்கபட்டுள்ளது இது முதல் முறை. மேலும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், அதிமுக கூட்டணி கட்சிக்குள் சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜ்நாத் சிங்- லாயிட் ஆஸ்டின் இன்று சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details