நீலகிரி மாவட்டம் குன்னுாா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் ஜாலியாக காட்டெருமை சுற்றித்திரிதல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குன்னுார் அருகேயுள்ள கேத்தி பகுதியில் நேற்று வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டெருமை அங்குள்ள தனியார் பள்ளிக்குள் திடீரென்று புகுந்து விட்டது. இதை எதிர்பார்க்காத பள்ளி மாணவர்கள் ஓட்டம்பிடித்து வகுப்பறைக்குகள் சென்றனர். இதில், பயந்த மாணவர்கள் கூச்சலிட தொடங்கியதை அடுத்து பள்ளியின் காவலர்கள் உடனடியாக காட்டெருமையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.