நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளன. குறிப்பாக காட்டெருமைகள் உணவு, தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 30) போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள கோத்தகிரி ராம் சந்த் சதுக்கம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கட்டெருமைகள் வந்து நீண்டநேரம் நின்றன. மேலும் அங்கிருந்து வனப்பகுதிக்கு செல்ல வழிதெரியாமல் காட்டெருமைகள் சுற்றிதிரிந்தன.
கோத்தகிரியில் கும்பலாக சுத்தும் காட்டெருமைகள்! - கும்பலாக சுத்தும் காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி: கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் கும்பலாக உலா வந்த காட்டெருமைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![கோத்தகிரியில் கும்பலாக சுத்தும் காட்டெருமைகள்! கும்பலாக சுத்தும் காட்டெருமைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8234262-thumbnail-3x2-nil.jpg)
கும்பலாக சுத்தும் காட்டெருமைகள்
கும்பலாக சுத்தும் காட்டெருமைகள்
இந்த காட்டெருமைகள் கும்பலை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிங்க: யானையை துரத்தும் காட்டு நாய்கள்