நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த பெரிய பிக்கட்டி பகுதியில் வசித்துவந்தவர் லட்சுமி (65). இவர் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.
இவர் வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கி தூக்கி வீசியது. இதில் லட்சுமியின் முதுகு, நெஞ்சு, கை, கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.