நீலகிரி மாவட்டம், 65 விழுக்காடு வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு உள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது இரை தேடியும், தண்ணீர் தேடியும் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.
அப்போது மனிதர்களைத் தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரக்கூடிய, காட்டெருமைகள் மக்களைத் தாக்குகின்றது.