நீலகிரி மாவட்டம் குன்னுார் பாரதிய வித்யா பவனின் 15ஆவது ஆண்டு இசை, நடன நிகழ்ச்சி குன்னுார் உபாசி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவினை பாரதிய வித்யா பவன் தலைவரான அணு ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
குன்னூரில் கண்ணைக்கவரும் இசை, நடன நிகழ்ச்சி! - இசை
நீலகிரி: பாரதிய வித்யா பவனின் 15ஆவது ஆண்டு இசை, நடன நிகழ்ச்சி குன்னுார் உபாசி அரங்கில் நடைபெற்றது.

நடன நிகழ்ச்சி
முதலில், சென்னையைச் சேர்ந்த மாணவி பிரனதி ராமதுரையின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில், கவுத்துவம், வர்ணம், ஜாவளி, தில்லானா ஆகிய பிரிவுகளில் நடனம் சிறப்பாக நடைபெற்றது.
பாரதிய வித்யா பவனின் 15ஆவது ஆண்டு இசை, நடன நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் நூற்றிற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு இசை, நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர். பாரதிய வித்யா பவனின் 15ஆவது ஆண்டு இசை, நடன நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பாரதிய வித்யா பவன் அமைப்பைச் சார்ந்தோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.