இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் துர்கா பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதில் இயற்கைச் சார்ந்த பொருள்களும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகன் சிலைகளும் பிரமாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன.
வட மாநில மக்களின் சிறப்பு துர்கா பூஜை இந்த நிகழ்ச்சியில் வட மாநில மக்களான பெங்கால் மாநில மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாட்டுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் மகா சப்தமி பூஜை, புஷ்பாஞ்சலி, ஆரத்தி ஆகியவை சிறப்பாக நடந்தன.
தொடர்ந்து நடந்த சுமங்கலி பூஜையில் அம்மனுக்கு குங்குமம், திலகம் சார்த்தி பெண்கள் பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'ஒழிந்தான் மகிஷாசூரன்; இனி ஓய்வெடுப்பார் மகாகாளி!'- தோவாளையில் நடந்த முத்தாரம்மனின் வதம்!