நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதியில் கரடிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், குன்னூர் உருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நள்ளிரவில் கரடி பிரதான நுழைவு வாயிலின் அருகே உலா வந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அச்சம் அடைந்தனர்.
குன்னூர் வெடி மருந்து தொழிற்சாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு! - coonoor
நீலகிரி: குன்னூர் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையின் வாயிலில் உலா வந்த கரடியை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
குன்னுாா் வெடி மருந்து தொழிற்சாலையில் உலா வந்த கரடி
பின்னர், சற்று நேரம் அப்பகுதியில் நின்றுவிட்டு மீண்டும் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரங்களில் உலா வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:இரையை விழுங்கி நகர முடியாமல் தவித்த பாம்பு - குடியிருப்பு வாசிகள் அச்சம்