நீலகிாி மாவட்டம், கோத்தகிாி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூண்டில் சிக்கிய கரடி - பொதுமக்கள் நிம்மதி! - வனத்துறையினர் கூண்டில் வைத்து பிடித்த கரடி
நீலகிாி: கோத்தகிாியில், கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவந்த கரடியை வனத்துறையினர் பிடித்து, மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கரடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த நிலையில், அங்குள்ள கோயிலுக்குள், கடைகளுக்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, கரடியை பிடிக்க பெரிய கூண்டு தயார் செய்து வைத்தனர்.
இந்நிலையில், அதிகாலை மூன்று மணியளவில் கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதனைக் காண்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர், பின்னர் கரடியை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர். அட்டகாசம் செய்த கரடியை பிடித்த பின்பே பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.