நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். குன்னுாரில் உள்ள சீம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி இன்று துவங்கியது.
இந்த கண்காட்சியில் 2 டன் பழங்களில் உருவாக்கப்பட்ட ராட்சத கழகு, பாண்டா கரடி, தேனீ ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பூங்கா முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரம் மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.