தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் பகல் நேரத்தில் தெருக்களில் கரடிகள் உலா - மக்கள் அச்சம்

குன்னூர் அருகே மவுன்ட் பிளசென்ட் பகுதியில் பகல் நேரங்களில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னூரில் பகல் நேரத்தில் தெருக்களில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம்
குன்னூரில் பகல் நேரத்தில் தெருக்களில் கரடிகள் உலா வருவதால் மக்கள் அச்சம்

By

Published : Sep 22, 2022, 4:48 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள மவுன்ட் பிளசென்ட் பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் ஆங்கிலப்பள்ளி ஆகியவை உள்ளன. இப்பகுதியில் பள்ளிக்குழந்தைகள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் இவ்வழியாக நடந்து செல்கின்றனர்.

தற்போது பகல் நேரங்களில் கரடி உலா வருவது அப்பகுதி மக்களை அச்சப்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் கரடி சுற்றித் திரிவதை தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயிர்பலி ஏற்படும் முன் குன்னூர் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் பகல் நேரத்தில் தெருக்களில் கரடிகள் உலா - மக்கள் அச்சம்

இதையும் படிங்க: குன்னூர் அருகே அரசுப்பள்ளியை சேதப்படுத்திய கரடி - மாணவர்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details