நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தில் மசினகுடி மாயார் பகுதி உள்ளது. இங்கு வன விலங்குகளை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்று மசினகுடி - மாயார் சாலையில் சுற்றுலாப் பயணிகளின் கார் சென்றபோது, வன பகுதியிலிருந்து சாலைக்கு கரடி ஒன்று வந்தது.
இதையடுத்து, அந்த கரடி சுற்றுலாப் பயணிகளின் கார் முன் வந்து, காரை செல்ல விடாமல் வழி மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் வாகனத்தை வழி மறித்த, கரடியை பார்த்து அதிர்ந்தனர். அதன்பின், சிறிது நேரத்திற்குப் பின்பு கரடி வனப் பகுதிக்குள் சென்றது. வன விலங்குகளை கண்டால் வாகனத்திலிருந்து இறங்கி புகைப்படம் எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.