தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது அருகிலுள்ள ஊருக்குள் தண்ணீர், உணவுத் தேடிவருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு வரும் சில வன விலங்குகள் மக்களை அச்சுறுத்திவருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரியில் பயணிகளை அச்சுறுத்தும் கரடி! - ஊருக்குள் புகுந்த கரடி
நீலகிரி: காட்டுக்குள் இருந்து வந்த கரடி ஒன்று மஞ்சூர் அருகே வாகனங்களில் செல்லும் பயணிகளை அச்சுறுத்திவருகிறது.
![நீலகிரியில் பயணிகளை அச்சுறுத்தும் கரடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3646328-thumbnail-3x2-deer.jpg)
bear
இதேபோல், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள பழைய பெட்ரோல் பங்க் என்னும் இடத்தில் சாலைக்கு வந்த கரடி ஒன்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்துவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
கரடி நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணிப்பதோடு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.