நீலகரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் அவ்வப்போது வருவது வழக்கம். தற்போது ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சமீபகாலமாக கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் ஹாயாக உலாவருகின்றன.
கடந்த சில நாள்களாக குன்னூர் உபதலைப் பகுதியில் கரடி ஒன்று சுற்றிவருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர்.