நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு வனப்பகுதியிலிருந்து இரண்டு கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வந்து விளையாடிக்கொண்டிருந்தது.
பின்னர், வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த குன்னூர்-உதகை சாலை அருகே வந்த ஒரு கரடி தீடீரென சாலையை கடக்க முயன்றது.
உயிர் தப்பிய கரடி
அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த காரின் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால், கரடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மற்றொரு கரடி வாகனங்களை கண்டு அதிர்ச்சியடைந்து வந்த பாதையிலேயே திரும்பி சென்றது.
நொடி பொழுதில் உயிர் தப்பிய கரடி இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நடுவழியில் கரடி, அல்லு விட்டுருச்சு- ஆனந்த் மகிந்திரா!