நீலகிரி: நீலகிரியின் வனப்பகுதிக்குள் கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது உணவுக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
இந்நிலையில் நேற்று (பிப்.10) குன்னூர் சேலாஸ் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியில் கரடி ஒன்று புகுந்தது. பின்னர் அங்கிருந்த சமையலறைக்குள் புகுந்து, மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை மூட்டைகள் உள்ளிட்டவற்றை சூறையாடி அட்டூழியத்தில் ஈடுபட்டது.