நீலகிரி: சமீப காலமாக காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள் உதகை நகரில் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. வனப் பகுதியில் போதிய உணவு இல்லாததாலும், அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே, இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒரு கரடி உதகை நகரின் கமர்சியல் சாலை வழியாக மையப் பகுதியில் உள்ள அக்ரகாரம் பகுதிக்கு வந்தது. ஒவ்வொரு தெருவாக உணவு தேடி சென்ற அந்தக் கரடியை கண்ட நாய்கள் தலை தெரிக்க ஓடின. சத்தம் கேட்டு எழுந்த குடியிருப்பு வாசிகள் கரடியைப் பார்த்து அச்சமடைந்து சத்தமிட்டனர்.