நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் வனவிலங்குகளும் பறவைகளும் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக, வெலிங்டன் பகுதியில் பேரி பிளம்ஸ், கொய்யா போன்ற பழங்களை உட்கொண்டு மரங்களில் கூட்டமாக வௌவால்கள் வாழ்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வௌவால்களின் நிபா வைரஸ் பரவிய நிலையில் தற்போது இவ்வகை பறவைகள் வருகை புரிந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.