நீலகிரி: குன்னூரில் மின் கம்பத்தில் சிக்கி பெரிய வௌவால் உயிரிழந்து 4 நாட்களாகிய நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வராததால் வனத்துறையினர் அகற்றினார்கள்.
மின் கம்பத்தில் சிக்கி பலியான வௌவால் - வனத்துறையினர் அகற்றி நடவடிக்கை - Bats die in electric post
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வௌவால் ஒன்று மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்து தொங்கிக்கொண்டிருந்தது . இது தொடர்பாக, மின் வாரிய துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.
![மின் கம்பத்தில் சிக்கி பலியான வௌவால் - வனத்துறையினர் அகற்றி நடவடிக்கை Bats die in electric post](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9238348-1088-9238348-1603144427245.jpg)
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் கேரளாவில் இருந்து வௌவால் கூட்டம் கூட்டமாக வருகிறது. தற்போது பல வௌவால்கள் இடம் பெயர்ந்த நிலையில், வண்ணாரபேட்டை அருகே சில உள்ளன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வௌவால் ஒன்று மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்து தொங்கிக்கொண்டிருந்தது . இது தொடர்பாக, மின் வாரிய துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் கடும் துர்நாற்றம் வீசியதால், வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவானது. தொடர்ந்து நேற்று வனத்துறைக்கு இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். வனச்சரகர் சசிகுமார் உத்தரவின்பேரில் வனக்காவலர் மோகன்குமார், வனத்துறையினர் அங்கு வந்து அதை அகற்றி அதே பகுதியில புதைத்தனர்.