நீலகிரி மாவட்டம் கூடலூர் சுங்கம் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் - புகையிலை பொருள்கள் பறிமுதல்
நீலகிரி: மைசூரில் இருந்து கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கூடலூருக்கு பழங்கள் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் ஒன்றில், பழங்களுக்கு இடையே இரண்டு அட்டைப் பெட்டிகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மறைத்துக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
பின்னர் லட்சக்கணக்கான மதிப்புடைய இந்த புகையிலைப் பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து, வாகன உரிமையாளர் நடராஜன் (60) என்பவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.