கடந்த 1977ஆம் ஆண்டு சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. பல்வேறு நாசகாரச் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதால், 2001ஆம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியுடன் தடைக் காலம் முடிவுக்கு வந்ததால், இது தொடர்பான விசாரணை தீர்ப்பாயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இயங்கிவருகிறது.
இந்நிலையில், குன்னூரில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தொடங்கிய தீர்ப்பாயத்தில், சட்ட வல்லுநர்கள், அலுவலர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவாதம் நடத்தினர்.
குன்னூரில் நடந்த உபா தீர்ப்பாயம் மேலும், பல்வேறு மாநிலங்களில் முக்கியப் பிரச்னையான குண்டுவெடிப்புகள் நடந்தது குறித்த விவாதமும் நடைபெற்றது.
இதில், இன்று ஐந்து சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்றும், வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை தொடங்கியுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் தெரிவித்துள்ளார்.