தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2020, 3:53 PM IST

Updated : Dec 14, 2020, 7:20 PM IST

ETV Bharat / state

குலதெய்வ கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு படுகர் இன மக்கள் எதிர்ப்பு

படுகர் இன மக்களின் குல தெய்வ கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அந்த சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

badagas community Leader
badagas community Leader

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள சீமை, மேற்குநாடு சீமை, பொரங்காடு சீமை, தொதநாடு சீமை உள்ளிட்ட நான்கு சீமைகளிலுள்ள 300 கிராமங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களது சொந்த செலவில் குல தெய்வ கோயில்களை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் படுகர் இன மக்களின் 20 குல தெய்வ கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே 4 சீமைகளிலுள்ள கோயில்களைச் சேர்ந்த நிர்வாகிகள், கிராம மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குலதெய்வ கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு படுகர் இன மக்கள் எதிர்ப்பு

பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமிழ்நாடு அரசு, அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதனை திரும்ப பெறாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: குமரியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Last Updated : Dec 14, 2020, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details