நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுண்டட்டி பகுதியில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக பகல் நேரத்திலேயே வளா்ப்புப் பிராணியைப் போல புலிக்குட்டி ஒன்று உலாவருகிறது. அதே சமயம் மனிதா்களைப் பொருட்டாகக் கருதாமல் எந்தவித அச்சமும் இல்லாமல் புலிக்குட்டி தனியே உலாவருகிற தகவலறிந்த வனத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
கோத்தகிரியில் வளர்ப்புப் பிராணி போல் உலாவரும் குட்டிப்புலி! - baby tiger at ooty
நீலகிரி: கோத்தகிரி அருகே தாயைப் பிரிந்த நிலையில் குட்டிப்புலி ஒன்று, தேயிலைத் தோட்டங்களில் மக்கள் மத்தியில் வளர்ப்புப் பிராணியைப் போல் உலாவருகிறது.
இது குறித்து வனத் துறை அலுவலர்கள் கூறுகையில், "இந்தக் குட்டிப்புலிக்கு ஒரு வயதுகூட நிறைவுபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தாயைப் பிரிந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தனியாகவே உலாவிவருகிறது. இந்தப் புலியால் தனியாக வேட்டையாடி உணவு உண்ணமுடியுமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. வழக்கமாகப் புலிகள் மனிதர்களைக் கண்டால் தவிர்த்து சென்றுவிடும் ஆனால் இந்தப் புலிக்குட்டி மனிதர்களைப் பொருட்டாகவே கருதாமல் வளர்ப்புப் பிராணியைப் போல் நடந்துகொள்கிறது" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் நீராவி இன்ஜின் சத்தம்: இது 165 ஆண்டுகளின் புதுமை!