நீலகிரி வெலிங்டன் மாளிகையில் களைக்கட்டிய கலை நிகழ்ச்சிகள் - நீலகிரி வெலிங்டன் மாளிகையில் எழுபத்து ஐந்தாவது ஆசாதி கா அமிர்தா மஹோத்சவ் நிகழ்ச்சி
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் முன்னாள் படை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் 75ஆவது ஆசாதி கா அமிர்தா மஹோத்சவ் திட்டத்தின்கீழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
நீலகிரி:சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகின்றன. அந்த வகையில், இன்று (ஆக.13) குன்னூர் அருகே உள்ள இந்திய ராணுவப் பயிற்சி மையத்தில் போர் விதவைகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர், போரில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதில் பழங்குடி மக்களின் நடனம், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் இசைக் குழுவின் சிம்போனி நிகழ்ச்சி, களரி பாய்ச்சல், செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதுதவிர விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன.