தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் பழமைவாய்ந்த மலை ரயில்களுக்கு ஆயுத பூஜை!

நீலகிரி: குன்னூரில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இன்ஜின்களுக்கு ஆயுத பூஜை செய்யப்பட்டது.

குன்னூர் பழமை வாய்ந்த மலை ரயில்களுக்கு ஆயுத பூஜை!
குன்னூர் பழமை வாய்ந்த மலை ரயில்களுக்கு ஆயுத பூஜை!

By

Published : Oct 23, 2020, 4:15 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயில் இன்ஜின் பணிமனை உள்ளது. இங்கு அந்த இன்ஜின்களுக்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஆயுத பூஜையையொட்டி, குன்னூர் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் உள்ள நீராவி இன்ஜின்கள், டீசல் இன்ஜின்கள், மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் பாதையைப் பராமரிக்கும் டிராலி உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் சுத்தப்படுத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டன.

பின்னர் இன்ஜின்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் இங்குள்ள, பணியாளர்கள் பங்கேற்றனர். கரோனா பாதிப்பால் எளிமையாக கொண்டாடப்பட்டது.

குன்னூர் பழமைவாய்ந்த மலை ரயில்களுக்கு ஆயுத பூஜை!

ஆங்கிலேயர் காலத்திலிருந்து இங்கு ஆயுத பூஜை காலங்களில் இன்ஜின்களுக்கு பூஜை செய்யப்பட்டுவருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க..சர்ச்சையை கிளப்பிய பாஜகவின் தேர்தல் வாக்குறுதி: விளக்கமளித்த மத்திய அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details