தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் ரூ.40 ஆயிரம் அபராதம்!

நீலகிரி: குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தினால் 40 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தொழிலாளர் நலத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தை தொழிலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

By

Published : Nov 26, 2020, 10:00 PM IST

நீலகிரி மாவட்ட குன்னூர் தொழிலாளர் நலத் துறை மற்றும் சைல்டு லைன் சார்பில் குன்னூர் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து, பேருந்து நிலையம் உள்ளிட்ட அப்பகுதி கடைகளில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.

அந்த நோட்டீஸில், ‘குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க வேண்டும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது, குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் தண்டனை விதிக்கப்படும், குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தியது தொடர்பாக 1098 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், கடைகள் அல்லது நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனத் தொழிலாளர் நல அலுவலர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: வறுமையால் சிறுவன் போல வேடமிட்டு சுக்கு காபி விற்ற சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details