நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் குன்னூர் கோத்தகிரி, உதகையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஐந்தாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 150 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சி முகாமில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, உலகம் மற்றும் சுற்றுசூழல் கல்வி, புதிய உத்திகளை பயண்படுத்தி மாணவர்களிடம் கல்வியை சேர்பது, போக்சோ சட்டம் குறித்து குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட 12 தலைப்புகளில் பயிற்சியளிக்கப்பட்டது.