தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரங்குகளுக்கு உணவளித்த ஆட்டோ ஓட்டுநர்! - கொரோனா வைரஸ்

குன்னூரில் பசியால் வாடும் குரங்குகளுக்கு 50 கிலோவாழை பழங்களை  ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வழங்கினார்

உணவளித்த ஆட்டோ ஓட்டுநர்
உணவளித்த ஆட்டோ ஓட்டுநர்

By

Published : Jun 9, 2021, 4:46 PM IST

நீலகிரி: கரோனா தொற்று தாக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், காவலர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் பல்வேறு அமைப்புகள் உணவு வழங்கி வருகின்றனர்.

ஆனால் தெரு ஓரங்களிலும், சாலையோரங்களிலும் உள்ள குரங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடி வருகிறது. இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள குரங்குகளுக்கு குன்னூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர் நேரடியாக சென்று 50 கிலோ வாழை பழங்களை வழங்கியுள்ளார்.

இதுபோன்று மனிதர்களைச் சார்ந்து வாழும் வாயில்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குவது குறித்து அரசு சற்று கவனம் எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சொக்க வைக்கும் சொர்ணக்கிளி சோனம் கபூருக்கு பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details