நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 29ஆம் தேதி மஞ்சூர் அருகேயுள்ள மட்டகண்டி கிராமத்தில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தன் காதலன் வருவதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து கடந்த இரண்ட நாட்களாக மணப்பெண் குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன.